இனிமேல் பேஸ்புக் கிடையாது... பெயரை மாற்றினார் மார்க் ஜுக்கர்பெர்க் - புதுப்பெயர் என்ன தெரியுமா?

facebook MarkZuckerberg
By Petchi Avudaiappan Oct 28, 2021 11:45 PM GMT
Report

பேஸ்புக் செயலியின் பெயர் மாற்றப்பட்டுள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.

பிரபல சமூகவலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. இதனிடையே கடந்த சில வாரங்களாக ஃபேஸ்புக்கின் நிறுவனப் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அத்துடன் புதிய பயணமாக மெட்டாவெர்ஸ் என்கிற வெர்ச்சுவல் உலகத்தை உருவாக்க ஃபேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் திட்டமிட்டுள்ளார் எனவும் கூறப்பட்டது.

இனிமேல் பேஸ்புக் கிடையாது... பெயரை மாற்றினார் மார்க் ஜுக்கர்பெர்க் - புதுப்பெயர் என்ன தெரியுமா? | Facebook Announces Changing Company Name

இந்நிலையில் பேஸ்புக் நிறுவனத்தின் கனெக்ட் விர்ச்சுவல் ரியாலிட்டி மாநாட்டில் பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் கலந்தி கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும் 'பேஸ்புக்'கின் பெயர் மாற்றப்பட்டுள்ளதாகவும்,  புதிதாக “மெட்டா” என பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

மேலும் சமூக பிரச்னைகளுடன் போராடி நிறைய கற்றுக் கொண்டோம், கற்றுக் கொண்ட அனைத்தையும் கொண்டு புதிய அத்தியாயத்தை உருவாக்க வேண்டிய நேரம் இது. அதே சமயம் தங்கள் 'ஆப்'களும், அவற்றின் பிராண்டுகளும் மாறவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.