Thursday, May 1, 2025

நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேருந்துகள் : பதை பதைக்கவைக்கும் சிசிடிவி காட்சிகள்

By Irumporai 3 years ago
Report

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே நேற்று தனியார் பேருந்தும் கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து நேற்று மாலை சங்ககிரி செல்லும் சாலையில் கோழிப்பண்ணை என்ற இடத்தில் எடப்பாடி நோக்கி செல்லும் கல்லூரி பேருந்தும், எடப்பாடியில் இருந்து திருச்செங்கோடு நோக்கி சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேருந்துகள் : பதை பதைக்கவைக்கும் சிசிடிவி காட்சிகள் | Face To Face Buses Accident Cctv Footage

இந்த விபத்தில் கல்லூரி பேருந்தில் பயணம் செய்த மாணவ மாணவிகள் சுமார் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயமடைந்தனர். அதேபோன்று தனியார் பேருந்தில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த இரண்டு பேருந்துகளும் மோதிக்கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் சாலையில் வந்துகொண்டிருந்த தனியார் பேருந்தின் மீது சாலை விதிகளை மீறியபடி வந்த கல்லூரி பேருந்து மோதியுள்ளது.

இது சிசிடிவி காட்சிகளின் மூலம் தற்போது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் விபத்து நடந்த சிசிடி வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது.