அபராதம் விதித்துதான் முகக்கவசம் அணிய வேண்டும் என்று இல்லை : அமைச்சர் மா.சுப்பிரமணியன்
DMK
Ma. Subramanian
By Irumporai
பொதுமக்கள் அபராதம் போட்டுதான் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது அவசியமில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கும் கொரோனா
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது, ஆகவே கொரோனா கட்டுப்பாடுகளை மாநிலங்கள் அமல்படுத்தி வருகின்றன.

முகக்கவசம் முக்கியம்
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா,சுப்பிரமணியன் காவல்துறையினர் அபராதம் விதித்துதான் முகக்கவசம் அணிய வேண்டும் என்று இல்லை. முகக்கவசம் அவசியம் என்பதை பொதுமக்கள் அறிந்து செயல்பட வேண்டும்.
நாடு முழுவதும் நேற்று 960 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று தொற்று பாதிப்பு 4 மடங்காக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார்.