நேரா வர சொல்லுங்கள் அவங்க முகமூடியை நாங்கள் கிழிக்கிறோம் - ஆவேசமான அமைச்சர் ஜெயக்குமார்

minister admk tamilnadu
By Jon Feb 20, 2021 02:21 AM GMT
Report

திமுக வினர் ஆளுநரை சந்தித்து மனு அளிக்க செல்வதெல்லாம் , விளம்பரம் மற்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையிலான குழு, இன்று மாலை சென்னை ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்து, அதிமுக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஊழல் செய்ததற்காக 2-ம் கட்ட புகார் பட்டியலை அளிக்க உள்ளதாக தகவல் கூறப்பட்டது.

இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் கூறிய அமைச்சர் ஜெயக்குமார், அவர்களை நேரடியாக வர சொல்லுங்கள், விவாதத்தை நடத்த சொல்லுங்கள், அவர்களாது முகமூடியை நாங்கள்கிழிக்கிறோம் என தெரிவித்த அமைச்சர்.

எங்கள் மடியில் கணமில்லை என்பதால் வழியில் பயமில்லை என்ற அடிப்படையில் நாங்கள் நேருக்கு நேருக்கு திமுகவை விவாதம் நடத்த வர சொல்கிறோம். நேருக்கு நேர் வர தைரியம் இல்லாமல்ஆளுநரை சந்தித்து மனு அளிப்பதெல்லாம் அரசியல் காழ்ப்புணர்ச்சி, விளம்பரம் நோக்கம் என்றும் ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப கூறினால் உண்மையாகிவிடும் என திமுகவினர் நினைப்பதாக கூறினார்.