மிரட்டலாக கேட்ச் பிடித்த பஞ்சாப் வீரர் - வாயைப் பிளந்த ரசிகர்கள்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வீரர் பேபியன் ஆலன் பிடித்த மிரட்டலான கேட்ச் ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரில் துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.இதில் ராஜஸ்தான் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி வீரர் லிவிங்ஸ்டோன் அடித்த பந்தை பஞ்சாப் அணியின் பேபியன் ஆலன் மிரட்டலாக கேட்ச் பிடித்து அசத்தினார். ஆட்டத்தின் 11 ஓவரை அர்த்ஷீப் சிங் வீச லிவிங்ஸ்டோன் பந்தை சிக்ஸருக்கு முயற்சி செய்து அடித்தார். ஆனால் எங்கிருந்தோ வந்த ஆலன் ஓரே பாய்ச்சலில் கேட்ச் பிடித்து அசத்தினார்.
Fabian Allen- what a beauty? #PBKSvsRR pic.twitter.com/BzEryruxwU
— Kart Sanaik (@KartikS25864857) September 21, 2021