ஆடை நிறத்திற்கு ஏற்றவாறு நிறம் மாறும் கண்கள்.. அதிசய குழந்தை -இந்தியாவில் எங்கு தெரியுமா?
இந்தியாவில் ஆடை நிறத்திற்கு ஏற்றவாறு நிறம் மாறும் கண்கள் உடைய அதிசய குழந்தை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கண்கள்
உத்தரப்பிரதேசம் மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்றரை வயது சிறுவன் அர்ஷ் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், இவரது கண் ஆடை நிறத்திற்கு ஏற்றவாறு நிறம் மாறுகிறது. கருப்பு ஆடை அணிந்தவுடன், அவரது கண் நிறம் திடீரென கருப்பு நிறமாக மாறியது.
பின்னர் நில நிறத்தில் ஆடை அணிந்த போது அவரது கண் நீல நிறத்தில் மாறியது.மேலும் பலர் அதைத் தெய்வீக அதிசயம் என்று நம்புகிறார்கள். இது குறித்து கண் மருத்துவர் ஒருவர் கூறுகையில்,’’ இது வெறும் மாயை. ஆனால், அர்ஷின் குடும்பத்தினர் இதை இயற்கையின் அதிசயமாகக் கருதுவதாகக் கூறுகிறார்.
அதிசய குழந்தை
ஆடைகளின் நிறத்திற்கு ஏற்றவாறு கண்கள் நிறத்தை மாற்றுவது அறிவியல் பூர்வமாகச் சாத்தியமில்லை என்றாலும், லேசான நிறக் கண்களைக் கொண்டவர்கள், குறிப்பாக ஹேசல், சில சமயங்களில், கருவிழியிலிருந்து ஒளி பிரதிபலிக்கும் ஒளியியல் மாயையின் காரணமாக,
அவர்களின் ஆடைகளின் நிறம் உட்பட, அவர்களைச் சுற்றியுள்ள வண்ணங்களைப் பொறுத்து கண்களின் நிறம் மாறும். இது உண்மையான வண்ண மாற்றம் அல்ல, மாறாகச் சுற்றியுள்ள சூழலின் அடிப்படையில் ஒரு கருத்து மாற்றம் என்று தெரிவித்துள்ளார்.