கண் கலங்கிய எடப்பாடி: மனம் திறந்து மன்னிப்பு கோரிய ஆ.ராசா
முதல்வர் பழனிசாமி பற்றி தெரிவித்த கருத்துக்கு மனம் திறந்து மன்னிப்பு கோருகிறேன் என திமுக எம்.பி ஆ.ராசா தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஆயிரம் விளக்கு பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக எம்.பி ஆ.ராசா முதல்வர் பற்றி தெரிவித்திருந்த கருத்து சர்ச்சைக்குள்ளாகியிருந்தது.
எடப்பாடியையும், ஸ்டாலினையும் ஒப்பிட்டு ஆ.ராசா தெரிவித்திருந்த கருத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். ஆ.ராசாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து தன்னுடைய கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருப்பதாக விளக்கம் அளித்திருந்தார் ஆ.ராசா

நேற்று திருவொற்றியூரில் நடைபெற்ற பிரச்சாரத்தில் ஆ.ராசாவின் கருத்தை குறிப்பிட்டு முதல்வர் கண் கலங்கியிருந்தார். தற்போது என் பேச்சால் முதல்வர் கண் கலங்கினார் என்பதை கேட்டு மிகவும் மனவேதனை அடைந்தேன்.
முதல்வர் பற்றி தெரிவித்த கருத்துக்கு மனம் திறந்து மன்னிப்பு கோருவதாக ஆ.ராசா தெரிவித்துள்ளார்.