அதி தீவிரமாக பரவும் கொரோனா: இந்த பகுதிகளை உடனடியாக அடைக்க உத்தரவு
தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலை அதிதீவிரமாக பரவி வருவதால், பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மதுரை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தெருக்களை அடைக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.
மாநகராட்சி ஆணையர் தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 20 வார்டுகள் பரிசோதனை முகாம் அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர்.
குறிப்பாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் உள்ள பகுதிகளை அடைத்துவிட்டு, மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மட்டும் வழங்கவும், கபசுரக்குடிநீர் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.
மிக முக்கியமாக பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.