காதலியுடன் அறை எடுத்து உல்லாசம்; காதலன் கொடூர செயல் - பகீர் வாக்குமூலம்!
நபர் ஒருவர் காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகாத உறவு
சேலம், தப்பக்குட்டை பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவருக்குத் திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர்.

இவர் ஏரியூரைச் சேர்ந்த கணவரைப் பிரிந்து வாழ்ந்த சாலா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியுள்ளது. தொடர்ந்து தனிமையில் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர்.
அப்போது சாலா, தன்னை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி, பார்த்திபனை வற்புறுத்தி உள்ளார். இல்லையென்றால் தனக்கு பெரிய தொகையை கொடுத்து செல்டிமெண்ட் செய்து வைக்க வேண்டும் எனக்கூறி அழுத்தம் கொடுத்துள்ளார்.
பெண் கொலை
இதனால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரம் அடைந்த பார்த்திபன், சாலாவை கழுத்தை நெறித்து துடிதுடிக்கக் கொலை செய்து விட்டு, இரவோடு இரவாக ஊருக்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட விடுதிக்குச் சென்ற ஏற்காடு போலீசார், சாலாவின் சடலத்தை மீட்டு பார்த்திபனைக் கைது செய்து விசாரித்தனர்.
தொடர்ந்து அடிக்கடி பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாலும், திருமண அழுத்தம் கொடுத்ததாலும் ரகசிய காதலியைக் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.