மங்களகரமான நாட்களில் பதிவு செய்ய கூடுதல் கட்டணம் - முதன்மை செயலர் அனுமதி

TNGovt Extra fees Registration
By Irumporai Apr 13, 2021 10:48 AM GMT
Report

தமிழகத்தில் மங்களகரமான நாட்களில் பதிவுத்துறை செயல்பட கூடுதல் கட்டணம் வசூலிக்க முதன்மை செயலர்பீலா ராஜேஷ் அனுமதி அளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் பத்திர பதிவுத்துறை செயல்பட்டு வரும் நிலையில், மங்களகரமான சித்திரை முதல் நாள், ஆடிப்பெருக்கு, தைப்பூசம் உள்ளிட்ட நாட்களில் பலர் பத்திரபதிவு நடத்த விரும்புவார்கள்.

இதனால் மங்களகரமான நாட்களில் பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்படுவது குறித்து தமிழக முதன்மை செயலர் பீலா ராஜேஷ் கடிதம் அனுப்பியுள்ளார்.

மங்களகரமான நாட்களில் பதிவு செய்ய கூடுதல் கட்டணம் - முதன்மை செயலர் அனுமதி | Extra Fees Register Secretary Tngovt

அதன்படி பதிவுத்துறையின் ஆலோசனையை ஏற்பதாகவும் மங்களகரமான ஆடிப்பெருக்கு, சித்திரை முதல் நாள், தைப்பூசம் ஆகிய நாட்களில் பதிவுத்துறை அலுவலகங்கள் இயங்கலாம் என தெரிவித்துள்ளார் .

மேலும் அத்தையக நாட்களில் மேற்கொள்ளப்படும் ஆவணப்பதிவுகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க படும் என கூறப்பட்டுள்ளது.