கூடுதல் கட்டணம் வசூலித்தால் சட்டம் பாயும் : தலைமை செயலாளர் எச்சரிக்கை

warns extrafees
By Irumporai May 18, 2021 06:22 PM GMT
Report

தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை செயலர் இறையன்பு எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, மருந்துகளைக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது, அரசின் இலவச சேவைகளுக்கும் பாதிக்கப்பட்டவர்களிடம் கையூட்டு பெறுவது போன்ற மனிதநேயமற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்

.மேலும் தவறு செய்யும் அலுவலர்கள் மீது பணிநீக்கம் உட்பட துறைரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

ஆகவே ,அரசுக்கு அவப்பெயர் ஏற்படாமல், கவனமாகவும், கண்ணியமாகவும் செயல்பட வேண்டுமென கேட்டுக்கொள்வதாக  தெரிவித்துள்ளார்.