தேர்தலை முன்னிட்டு சென்னையில் மேலும் 45 பறக்கும் படைகள் அமைப்பு
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது.
இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சூராவளி பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில் இன்று மாலையுடன் அனைத்து வகையான பிரசாரங்களும் முடிவடைகிறது.
இந்நிலையில், வாக்குபதிவு நடைபெறும் நாலன்று முழுவதும் 80 ஆயிரம் காவலர்கள், 12 ஆயிரம் ஊர்க்காவல் படையினர் உள்பட சுமார் 1 லட்சம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னையில் மட்டும் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மேலும், 3 ஆயிரம் முன்னாள் ராணுவத்தினரையும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த காவல்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
200 வார்டுகளைக்கொண்ட சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் பணம் பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்களை தடுக்க கூடுதலாக 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான ககன்தீப் சிங் பேடி துவக்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ககன்தீப் சிங் பேடி,
“நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, சென்னையில் கூடுதலாக 45 தேர்தல் பறக்கும் படை குழுக்களை மாநில தேர்தல் ஆணையம் அமைத்ததுள்ளது.
#ChennaiCorporation#LocalBodyElections2022#ChennaiElections pic.twitter.com/oa7ujtNB8Y
— Greater Chennai Corporation (@chennaicorp) February 15, 2022
சென்னையில் 90 பறக்கும் படைகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. பணம், பரிசுப் பொருட்கள் விநியோகம் குறித்து புகார் அளிக்கலாம், புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னையில் இதுவரை ரூ.1.45 கோடி மதிப்புள்ள பணம், பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் 13 ஆயிரம் இடங்களில் பிரசார போஸ்டர்கள் அகற்றப்பட்டுள்ளன. சுவரொட்டி ஒட்டினால் சம்பந்தப்பட்ட வேட்பாளரிடம் அபராதம் வசூலிக்கப்படும்” என தெரிவித்தார்.