ஆயுத பூஜைக்கு ஊருக்கு போன மக்களுக்கு ஹாப்பி நியூஸ் சொன்ன தமிழக அரசு!!
கடந்த வெள்ளிக்கிழமை முதல் நாளை வரை விடுமுறை தினம் என்பதால் வெளிஊரில் வேலை பார்க்கும் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.
சரஸ்வதி பூஜை விடுமுறை
இன்று ஆயுத பூஜை, நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்படும் நிலையில், கடந்த சனி கிழமையன்றே சொந்த ஊருக்கு சென்றவர்கள் அதிகம். தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் பலரும் சொந்த ஊர் நோக்கி சென்ற நிலையில், அதற்காக சிறப்பு பேருந்துகளும் அதிகளவில் இயக்கப்பட்டது.
4 நாட்கள் விடுமுறையை முடித்து நாளை இரவு முதல் புதன் வரை பலரும் சென்னை திரும்பவுள்ளனர். இதன் காரணமாக தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சிறப்பு பேருந்துகள் இயக்கம்
அதில், தமிழகத்தின் முக்கிய பகுதிகளான மதுரை, நெல்லை, கோவை, தஞ்சை, திருச்சி, சேலம் உட்பட பல நகரங்களில் இன்று துவங்கி புதன்கிழமை வரை சென்னை நகருக்கும், அதே சென்னையில் இருந்து மற்றநகரங்களுக்கும் 8000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து மொத்தமாக 5 லட்சம் பேர் வெளிஊர்களுக்கு சென்றதாக தகவலையும் தமிழக அரசு அதிகாரப்பூரவமாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.