மின் இணைப்புடன் ஆதார் எண்னை இணைக்க அவகாசம் நீட்டிப்பு

V. Senthil Balaji Government of Tamil Nadu
By Thahir Dec 31, 2022 12:15 PM GMT
Report

மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆதாரை இணைப்பதற்கான அவகாசம்  நீட்டிப்பு

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் அட்டை எண்ணை இணைக்க வேண்டும் என்றும் மின் அட்டையுடன் ஆதார் அட்டை இணைத்தால் மட்டுமே மின்கட்டணம் செலுத்த முடியும் என்றும் செய்திகள் வெளியானது.

இதனை அடுத்து பலர் மின்சார அலுவலகம் சென்று மின் அட்டை எண்ணுடன் ஆதார் அட்டை எண்ணை இணைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Extension of time to link Aadhaar number with electricity connection

இந்நிலையில் ஆதார் எண் இணைக்காவிட்டாலும் மின் கட்டணம் செலுத்தலாம் என்றும் ஆனால் கண்டிப்பாக மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

இதனிடையே மின் இணைப்புடன் ஆதார் எண்ணை டிசம்பர் 31 ஆம் தேதியுடன் இணைத்து விட வேண்டும் என கூறப்பட்டது. ஆனால் தற்போது மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜனவரி 31-ம் தேதிக்கு மேல் கால நீட்டிப்பு வழங்கப்படாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அதோடு மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க பகுதிவாரியாக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் எனவும் தகவல் வெளியிட்டுள்ளார்.