காலாண்டு விடுமுறை நீட்டிப்பு - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை அக்டோபர் 12ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வுகள் முடிந்த பிறகு, காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 9-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அக்டோபர் 6 - 8ம் தேதி வரை எண்ணும், எழுத்தும் பயிற்சி நடத்தப்பட உள்ளது.இதனால் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 12ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மேலும் துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான 2ம் கட்ட எண்ணும், எழுத்தும் பயிற்சி அக்டோபர் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடப்பதற்காக இந்த விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.