நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராத உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு
நடிகர் விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்த வருமான வரித்துறையின் உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இடைக்காலத்தடை நீட்டிப்பு
புலி திரைப்படத்திற்காக நடிகர் விஜய் வாங்கி சம்பளத்தில் ரூ.15 கோடி மறைத்ததாக அவர் மீது வருமான வரித்துறை 1.5 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் விஜய் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்த வருமான வரித்துறையின் உத்தரவுககு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பாக செப்டம்பர் 16-ம் தேதிக்குள் பதிலளிக்க வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது இடைக்காலத் தடையை அக்டோபர் 26 ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.