இலங்கையில் தொடரும் வன்முறை சம்பவங்களால் ஊரடங்கு நீட்டிப்பு..!

Sri Lankan protests Sri Lanka Sri Lankan Peoples
By Thahir May 10, 2022 04:39 PM GMT
Report

இலங்கையில் தொடர் வன்முறை சம்பங்களால் நேற்று ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் 12 -ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடும் அவதியடைந்த நிலையில் அரசுக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராட துவங்கினர்.

இந்நிலையில் நேற்று பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அங்கு பயங்கர கலவரம் ஏற்பட்டது.

மகிந்த ராஜபக்சே வீடு மற்றும் எம்.பிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது.

இதனிடையே பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தால் கண்டதும் கூட அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

பிரதேச சபை தலைவர் வீட்டை முற்றுகையிட்டவர்களை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் காயம் அடைந்தனர்.

இதையடுத்து வன்முறை சம்பவங்கள் தொடர்வதால் நாளை மறுதினம் வியாழக்கிழமை (மே - 12) காலை 7.00 மணி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.