இவற்றுக்கெல்லாம் தமிழகத்தில் அக்டோபர் 31 ஆம் தேதி வரை தடை: முதல்வர் அதிரடி அறிவிப்பு

tngovernment covid19restrictions
By Petchi Avudaiappan Sep 09, 2021 04:02 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ள நிலையில் அது தொடர்பான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. 

கொரோனா 2வது அலையில் பாதிப்பால் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனிடையே செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கொரோனா 3வது அலை வருவதற்கான அறிகுறிகள் இருப்பதாக மத்திய அரசின் சிறப்புக் குழு அறிக்கை அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் தமிழகத்தில் அன்றாடம் சுமார் 1600 புதிய நோய்த் தொற்று கண்டறியப்படுவதாகவும், சில மாவட்டங்களில் தினசரி எண்ணிக்கை சற்று உயர்ந்தும் காணப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அண்டை மாநிலமான கேரளாவில் நிபா வைரஸ் நோயின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் நிபா வைரஸ் தாக்கம் ஏற்படாதவாறு மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்துடனான பேருந்து போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு தொடர்ந்து எடுத்துவரும் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார நலனை கருத்தில் கொண்டு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆனால் திருவிழாக்கள், அரசியல், சமுதாய மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கு தடைகள் தொடகின்றன. கொரோனா மட்டுமின்றி நிபா வைரஸ் நோயின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டும், பொதுமக்கள் நலன் கருதி, அதிகப்படியான பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளான திருவிழாக்கள், அரசியல், சமூகம் சார்ந்த மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தற்போது உள்ள தடை அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வரை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுகிறது  என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.