தீயணைப்பு நிலையத்தில் வெடித்து சிதறிய ஆக்சிஜன் சிலிண்டர் - படுகாயம் அடைந்த அதிகாரிகள்
திருச்சியில் தீயணைப்பு நிலையத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து சிதறியதில் தீயணைப்பு வீரர்கள் 2 பேர் படுகாயமடைந்தனர்.
ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து சிதறியது
திருச்சி நீதிமன்றம் அருகே தீயணைப்பு நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பணிபுரிந்து வருகின்றனர்.
இன்று காலை வழக்கம் போல் அதிகாரிகள் செயல்பட்டு வந்த நிலையில், அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து சிதறியது.
தீயணைப்பு அதிகாரி சரவணன் மற்றும் வீரர் பிரசாந் ஆகியோருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரையும் தீயணைப்பு வாகனத்தில் சக அதிகாரிகள் திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தீயணைப்பு அலுவலகத்தில் ஏற்பட்ட இச்சம்பவம் பற்றி கண்டோன்மென்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.