மயில்சாமி குடும்பத்தில் விவாகரத்து கேட்ட மருமகள்கள்? மகன் அளித்த விளக்கம்!
மயில்சாமியின் குடும்பத்தில் மருமகள்கள் இருவரும் விவாகரத்து கேட்கின்றனர் என்ற செய்திக்கு அவரது மகன் அன்பு பதிலளித்துள்ளார்.
விவாகரத்து கேட்ட மருமகள்கள்
தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகரான மறைந்த மயில்சாமி குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று நேற்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் அதிகமாக பரவி வந்தது.
மயில்சாமி உயிருடன் இருக்கும்போதே அவரது இரண்டு மகன்கள் அருமை நாயகம் மற்றும் யுவன் ஆகியோருக்கு திருமணம் செய்து வைத்தார். ஆனால் அவர்களது திருமண வாழ்க்கை அவ்வளவு சுமுகமாகப் போகவில்லை. மருமகள்களுக்கும் மயில்சாமியின் மனைவிக்கும் மாமியார் மருமகள் சண்டை ஏற்பட்டுள்ளது.
மயில்சாமி இருந்தவரை இந்த பிரச்சனைகளை வெளியில் தெரியாமல் பார்த்துக் கொண்டார். ஆனால் மயில்சாமி மறைவுக்குப் பின்னர் சண்டை வேகமாக வளர்ந்து தகராறு ஏற்பட்டு இரண்டு மருமகள்களும் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளனர் என்று செய்திகள் வெளிவந்தன.
இந்த செய்திகளை கேட்டு மயில்சாமியின் ரசிகர்களும், நண்பர்களும் சோகத்தில் இருந்தனர். ஆனால் மயில்சாமியின் மகன் அன்பு இந்த செய்திகளுக்கு பதிலளித்துள்ளார்.
அப்படி ஏதும் இல்லை
அவர் கூறியதாவது"அந்தமாதிரி எந்த பிரச்சனையும் இல்லை, இது பைத்தியக்கார தனமா இருக்கிறது. இவர்களுக்கு வேற வேலையே இல்லை. ஏன் இவ்வளவு கேவலமாக யோசிக்கிறார்கள் என்று சிரித்துக் கொண்டே பதிலளித்துள்ளாராம்.

வவுனியா விமானப்படை தளத்தை உரிமை கோரும் புலம்பெயர் தமிழர்! பிமலுக்கு எதிராக வலுக்கும் இனவாத கருத்து IBC Tamil

அறுகம்குடா கடற்கரையில மேலாடையின்றி நடந்த வெளிநாட்டவர் ஆணா..! பெண்ணா..! வெடித்தது புதிய சர்ச்சை IBC Tamil
