நாய் உங்கள் செருப்பை அடிக்கடி கடிக்கிறதா? அப்போ இதுதான் காரணம் - தெரிஞ்சுகோங்க!
நாய்கள் அடிக்கடி செருப்பு கடிப்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நாய்கள்
மனிதர்களின் செல்ல பிராணி என்று முதலில் நம் நினைவுக்கு வருவது நாய்தான். இயற்கையாக நட்புடன் பழகும் குணத்தை கொண்ட நாய்கள் செய்யும் சில விஷயங்களுக்கு பின்னாடி இருக்கும் காரணங்களை தெரிந்து கொள்ளலாம். பொதுவாக இரவு நேரத்தில் நாய்கள் கார்,பைக்கை வேகமாக துரத்தும்.
மேலும் செருப்புகளை பார்த்தாலே கடிக்கும். ஆனால் நாய்களின் இந்த செயல்களுக்கு பின்னால் ஏதோ காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. நாய்கள் மனிதனின் காலணிகளை கடிப்பதற்கும், ட்ரஸை கடித்து கிழிப்பதற்கு காரணம் அது அந்த நபரை நேசிப்பதாக அர்த்தம் என்று கூறப்படுகிறது.
காரணம்
அவர்களின் நறுமணம் பிடித்ததால் அதை தக்க வைத்து கொள்ள இது போன்ற செயல்களின் ஈடுபடும். நாய்கள் ஒருவரை பிரிந்து வேதனையில் வாடும் . இதன்காரணமாக நாய்கள் போன்ற செயல்களின் ஈடுபடுவதாக கூறப்படுகிறது ஆனால் அது எப்போதும் பொருந்தாது.
பல சமயங்களில் கடுமையான பசியின் காரணமாகவும் நாய்கள் காலணிகளை மெல்வதை வாடிக்கையாக வைத்துள்ளது. நாய்கள் வயிற்றில் புழுக்கள் இருந்தாலும், அவை இந்த பழக்கத்திற்கு ஆளாவதாக தெரிகிறது. குறிப்பாக நாய் குட்டிகள் இது போன்று செயல்களில் ஈடுபடுவதற்கு காரணம் அது விளையாடுவதாகவும் இருக்கலாம்.