தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை

By mohanelango Jun 10, 2021 08:04 AM GMT
Report

தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

இந்நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது

அப்போது தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரம் காலம் ஊரடங்கை நீட்டிப்பு செய்ய உயர் அதிகாரிகள் குழு பரிந்துரைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் 11 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் அந்த மாவட்டங்களில் தளர்வு இல்லை. பிற மாவட்டங்களில் அதிகாலை நடைப்பயிற்சி, டாஸ்மார்க் கடைகள் திறக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.