பயங்கர தீ விபத்து..! - விலை உயர்ந்த கார்கள் எரிந்து நாசம்
பெங்களூரில் உள்ள கார் கேரேஜில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல சொகுசு கார்கள் எரிந்து நாசமானது.
கார் கேரேஜில் தீ விபத்து
பெங்களூரு, கஸ்தூரி நகரில் உள்ள கேரேஜ் தீ விபத்து ஏற்பட்டதில் பல வகைப்பட்ட உயர் ரக கார்கள் தீயில் சேதம் அடைந்தன. மேலும் இந்த தீ விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கஸ்தூரி நகரில் சிஎம்ஆர் சட்ட கல்லூரிக்கு அருகே உள்ள கார் கேரேஜில், தொழிலாளர்கள் பைக் ஸ்டார்ட்டரை பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது, மின் கசிவு (ஷார்ட் சர்க்யூட்) ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ சிறிது நேரத்தில் மற்ற வாகனங்களுக்கும் பரவியது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து நான்கு தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
5 கோடி ரூபாய் மதிப்புள்ள கார்கள் எரிந்து நாசம்
இந்த தீ விபத்தில் கேரேஜுக்குள் இருந்த ஆடி, பென்ஸ், பிஎம்டபிள்யூ போன்ற உயர்ரக கார்கள் சேதமடைந்தன. மேலும் இந்த விபத்தில் கேரேஜில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் காயமடைந்துள்ளார் என்றும் உயிர் இழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தின் வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. தற்பொழுது வரை தீ விபத்தில் 5 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.