முதல் போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இது தான் - யார், யாருக்கு இடம்?

 ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில் முதல் போட்டியில் சென்னை - மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐபிஎல் போட்டித் தொடர் இன்று மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளது.

இந்த போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரையில் நிச்சயம் ஒரு சில மாற்றங்கள் இருக்கும் என்றே தெரிகிறது. குறிப்பாக சென்னை அணியின் மிக முக்கிய வீரரும், துவக்க வீரருமான டூபிளசிஸ் முதல் போட்டியில் விளையாட வாய்ப்பு இல்லை என்பதால் அவருக்கு பதிலாக ராபின் உத்தப்பா களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் ஆல்ரவுண்டரான சாம் கர்ரானுக்கான தனிமைப்படுத்துதல் நாட்கள் இன்னும் நிறைவடையாததால் சாம் கர்ரானும் முதல் போட்டியில் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது. இந்த போட்டியில் ஆடும் சென்னை அணியில் இடம்பெறும் வீரர்கள் குறித்து உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் ராபின் உத்தப்பா, ருத்துராஜ் கெய்க்வாட், மொய்ன் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயூடு, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா,ட்வைன் பிராவோ, தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், ஜாஸ் ஹசில்வுட் ஆகியோர் இடம் பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

இந்த வீரர்கள் பட்டியல் கடைசி நேரத்தில் மாறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்