இன்னும் 36 மாதத்தில் எய்ம்ஸ் கட்டுமானம் முடியுமென நம்புறோம்: மதுரைக்கிளை நீதிபதிகள் நம்பிக்கை !

aiims madura
By Irumporai Aug 17, 2021 10:19 PM GMT
Report

மதுரையை சேர்ந்த ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு கடந்த 2019 ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டியது.

ஆனால் மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணிகளும் நடைபெறவில்லை. தற்போது கொரோனா பரவல் காரணமாக பல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அளவுக்கு அதிகமாக பணம் வசூல் செய்யும் சூழலில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்திருந்தால் ஒரே நேரத்தில் பல ஆயிரம் மக்கள் சிகிச்சை பெற்று பயன்பெற்றிருப்பார்கள்.ஆகவே  ஆகவே, மதுரை தோப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக நிதியை ஒதுக்கி, பணியை துரிதப்படுத்த உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இன்னும் 36 மாதத்தில் எய்ம்ஸ் கட்டுமானம் முடியுமென நம்புறோம்: மதுரைக்கிளை நீதிபதிகள் நம்பிக்கை ! | Expect Madurai Aiims Completed 36 Months Jugges

இந்நிலையில் நேற்று இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள்,தமிழகத்தோடு எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என அறிவிக்கப்பட்ட பிற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் ஏறத்தாழ முடியும் உள்ள நிலையில்தமிழகத்தில் பணிகள் அவ்வளவு துரிதமாக நடைபெற்றதாக தெரியவில்லையே என கேள்விஎழுப்பிய நீதிபதிகள்.

   ஒவ்வொரு நகர்வுக்கும் நீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்திராமல், எய்ம்ஸ் பணிகளை துரிதப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகவே, இந்த உத்தரவு கிடைக்கப்பெற்ற 36 மாதங்களுக்குள்ளாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என நீதிமன்றம் எதிர்பார்க்கிறது என வழக்கை முடித்து வைத்தனர்.