தமிழ்நாட்டில் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க பரிந்துரை
தமிழ்நாட்டில் அதிவேகமாக பரவி வந்த கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கி அமலில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் முக்கியமான ஆலோசனை நடத்தினார். இதில் தளர்வுகள் வழங்குவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க மருத்துவர்கள் வல்லுநர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
கொரோனா தொற்று குறைவாக உள்ள இடங்களில் தளர்வுகள் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 18 சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ள நிலையில் ஊரடங்கை உடனடியாக தளர்த்த முடியாது என வல்லுநர்கள் எச்சரித்தும் இருந்தனர்.
சென்னையில் பரவல் குறைந்திருந்தாலும் கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகமாக இருந்து வருகிறது.