தொடங்கியது அமமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம்: புதிய அணி உருவாகின்றதா?
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் செயற்குழு கூட்டம் மற்றும் பொதுக்குழுகூட்டம் தொடங்கியது. காணொளி காட்சி மூலம் தொடங்கியுள்ளது ராயப்பேட்டையில் தலைமை அலுவலகத்தில் கட்சியின் துணை தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெறூம் இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்றுள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் அமமுகவினை எவ்வாறு முன்னெடுத்துச்செல்வது என்பது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். நேற்று ஜெயலலிதாவின் பிறந்ததினத்தை முன்னிட்டு சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் ஜெ., படத்திற்கு மரியாதை செய்தார் சசிகலா.
அப்போது இயக்குநர்கள் பாரதிராஜார், அமீர், நாம் தமிழர் கட்சியின் சீமான், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், ராதிகா சரத்குமார் ஆகியோர் சசிகலாவை பாத்து பேசி பரபரப்பை ஏற்படுத்தினர்.
இந்த நிலையில் இன்றைய தினம் நடைபெறும் செயற்குழு கூட்டம் எதிர்ப்பார்ப்புடன் பார்க்கப்படுகிறது.