தஞ்சையை மிரட்டி வந்த பிரபல ரவுடிக்கு தூக்கு : நீதிமன்றம் உத்தரவு
பிரபல ரவுடி கட்ட ராஜாவுக்கு கும்பகோணம் நீதிமன்றம் தூக்குதண்டணை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
தஞ்சை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ராஜா , இவர் மீது 15 க்கும் அதிகமான கொலைவழக்குகள் காவல்துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் 2013- ம் ஆண்டு செந்தில்நாதான் எனபவர் கொலை தொடர்பாக ரவுடி கட்ட ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்குவிசாரணை கும்பகோணம் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கினை நீதிபதி பெஞ்சமின் ஜோசப் விசாரித்து வந்த நிலையில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, தஞ்சை ரவுடி கட்ட ராஜாவுக்கு தூக்குதண்டணையும் அவரது கூட்டாளிகள் இருவருக்கு ஆயுள் தண்டனையோடு ரூ, 12 ஆயிரம் அபரத தொகையினையும் விதித்தது.
ஏற்கனவே ராஜா மீது 16 கொலை வழக்குகள் இருந்த நிலையில் கும்பகோணம் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.