பயணிகளின் மரண ஓலம்...விபத்துக்குள்ளாகும் விமானத்தின் பரபரப்பு காட்சிகள் - இந்தியர்கள் உயிரிழப்பு

Facebook Viral Video Plane Crash Nepal Death
By Thahir Jan 16, 2023 06:30 AM GMT
Report

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 72 பேருடன் சென்ற விமானம் நேற்று காலை பொகாராவில் விழுந்து நொறுங்கியதில் 68 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியர்கள் 5 பேர் உயிரிழப்பு 

மேற்கு நேபாளத்தில் அமைந்துள்ள நகரின் பழைய மற்றும் புதிய விமான நிலையங்களுக்கு இடையில் விபத்துக்குள்ளான விமானத்தில் 68 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் என ஆக மொத்தம் 72 பேர் பயணித்தனர்.

இந்த 72 பேரில் 5 பேர் இந்தியாவில் உள்ள உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த காஜிபூரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

5 பேர்களில் ஒருவர் சோனு ஜெய்ஸ்வால் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் விமானம் தரையிறங்குவதற்கு முன்பு லைவ் செய்துள்ளார்.

பரபரப்பு காட்சிகள் 

அப்போது விமானம் தரையிறங்குவதற்கு முன்பு ஒரு பக்கமாக சாய்ந்து கீழே விழுகிறது. அப்போது பயணிகள் பயங்கரமாக அலறுகின்றனர்.

Exciting scenes of plane crash

பின்னர் விமானம் கீழே விழுந்து தீ பிடித்தது. தற்போது இந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.