தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் தாக்கப்பட்டதால் பரபரப்பு
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி டாக்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை மேல வண்டிக்காரத் தெருவைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் விபத்தில் காயமடைந்தார்.
உடனடியாக அவரை தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு நேற்றிரவு அழைத்து சென்ற உறவினர்கள், வரவேற்பு அறையில் பணியாற்றிய பயிற்சி டாக்டரிடம் சிகிச்சை அளிக்க கூறினர். அப்போது டாக்டருக்கும் காயம் அடைந்த வாலிபரின் உறவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது, தொடர்ந்து வாக்குவாதம் முற்றியதில் அங்கு இருந்தவர்கள் பயிற்சி டாக்டரை நாற்காலியை கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது.
மேலும் அங்கு உள்ள பொருட்களை சேதப்படுத்தியதால் கோபமடைந்த டாக்டர்கள் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த வருவாய் கோட்டாட்சியர் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினார், தொடர்ந்து மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்ற பின்னர் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.
இந்நிலையில் சிசிடிவி காட்சிகளை கொண்டு, போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.