பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு

Petrol diesel price
By Fathima Mar 27, 2026 05:12 AM GMT
Report

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ரூ.10 ஆக குறைத்துள்ளது மத்திய அரசு.

ஈரான்- அமெரிக்கா, இஸ்ரேல் போரினால் கச்சா எண்ணெய் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் பல நாடுகளில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

ஹார்மூஸ் நீரிணை முடக்கத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் ஏற்றத்தை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் இந்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்து உத்தரவிட்டுள்ளது.

பெட்ரோல் லிட்டருக்கு 13 ரூபாயிலிருந்து 3 ரூபாய் குறைக்கப்பட்டு, 10 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, டீசல் மீதான வரி 10 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன் விளைவாக பெட்ரோல், டீசல் விலை குறையவோ, உயரவோ செய்யாது என்ற போதும் எண்ணெய் நிறுவனங்களின் சுமையை குறைக்க குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு | Excise Duty For Petrol And Diesel