குடியரசுத் தின விழா - வாகா எல்லையில் பாக்.ரேஞ்சர்களுக்கு இனிப்பு வழங்கிய இந்திய பாதுகாப்பு படை வீரர்கள்..!

India's Republic Day Pakistan India Viral Photos
By Nandhini Jan 26, 2023 11:22 AM GMT
Report

குடியரசு தின விழாவையொட்டி வாகா எல்லையில் பாகிஸ்தான் ரேஞ்சர்களுடன் இந்திய பாதுகாப்பு படையினர் இனிப்பு வழங்கினர்.

பாக்.ரேஞ்சர்களுடன் இனிப்பு வழங்கிய இந்திய பாதுகாப்பு படை வீரர்கள்

இந்திய நாட்டின் 74வது குடியரசு தின விழா உலகமும் முழுவதும் உள்ள இந்தியர்களால் கொண்டாப்பட்டு வருகிறது.

டெல்லியில் உள்ள கடமைப்பாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி தொடங்கி வைத்தார். இதன் பிறகு, அணி வகுப்பு காலை 10.30 மணிக்கு தொடங்கியது.

குடியரசுத் தின விழாவில் தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பை தொடங்கின. டெல்லி குடியரசு தின விழாவில், தமிழ்நாடு அலங்கார ஊர்தி கம்பீரமாக அணிவகுத்து வந்தது.

இந்நிலையில், பஞ்சாப் அட்டாரி - வாகா எல்லையில் BSF (எல்லை பாதுகாப்பு படை) இன்று பாகிஸ்தான் ரேஞ்சர்களுடன் இனிப்புகளை பரிமாறிக்கொண்டது.

தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.     

exchanged-sweets-with-pakistan-wagah-border