அகழாய்வில் தங்கம் கண்டெடுப்பு : ஆதிச்சநல்லூரை தொடர்ந்து சிவகளையில் தங்கம்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சிவகளையில் மூன்றாம் கட்டம் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த அகழாய்வு பணியின் போது தங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் அகழாய்வு
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சிவகளையில் மூன்றாம் கட்டம் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த அகழாய்வு பணியின் போது தங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பராக்கிரமபாண்டு திரடு பகுதியில் 1 செ.மீ அளவிலான தங்கம் கிடைத்துள்ளது. முன்னதாக ஆதிச்சநல்லூரில் அகழாய்வில், இறந்தவர்களை புதைத்த இடத்தில் தங்கத்திலான பட்டயம், வெண்கலம் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்திருந்தன.
முதல்முறையாக தங்கத்திலான பொருள்
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் சிவகளை அகழாய்வில் வாழ்விடப்பகுதியில் தங்கம் கிடைத்துள்ளது. சிவகளை பரம்பு பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டும் முதல் கட்ட அகழாய்வும் 2021 ஆம் ஆண்டு இரண்டாம் கட்ட அகழாய்வும் நடைபெற்று வருகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் அகழாய்வில் முதல்முறையாக தங்கத்திலான பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதினிடையே சிவகளை பரம்பு பகுதிகளில் தோண்டப்பட்ட 10 குழிகளில் கண்டெடுக்கப்பட்ட 30 க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகளை திறந்து உள்ளே இருக்கும் பொருள்களை கண்டறியும் பணிகள் நேற்று முதல் தொடங்கியுள்ளது.