தேர்வு சீர்திருத்தங்களுக்கு நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டக் குழு: பிரதமர் மோடி அறிவிப்பு
தேர்வு முறைகளில் வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை மற்றும் தொழில்நுட்பப் பயன்பாட்டை மேம்படுத்தும் நோக்கில், இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டக் குழுவை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இன்று வெளியிட்ட காணொளியில் பேசிய அவர், மாணவர்களின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும், தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், தேர்வு முறையில் விரிவான சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் நந்தன் நிலேகனி தலைமையிலான குழு அமைக்கப்படுவதாக அவர் கூறினார்.
HIGH POWERED TASK FORCE on examination reforms under the leadership of Shri Nandan Nilekani constituted.@NandanNilekani pic.twitter.com/mMpmPdIEL5
— Narendra Modi (@narendramodi) July 26, 2026