வினாத்தாள் லீக், புதிய வினாத்தாளில் தேர்வு : அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
நாளை நடைபெறவுள்ள 12-ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வின் கணித வினாத்தாள் புதிய வினாத்தாள்கள் மூலம் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை நடைபெற இருந்த 12-ம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான கணித வினாத்தாள் லீக்கானது.
இந்நிலையில், புதிய வினாத்தாள் மூலம் 12-ஆம் வகுப்பு கணிதத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இரண்டாவது திருப்புதல் தேர்வுகளில் கணித வினாத்தாள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் மருத்துவம் தவிர்த்த பிற படிப்புகளுக்கு 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடப்பதால், இதை அரசு எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
வினாத்தாள் கசிவுக்கு காரணமானவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த மாதம் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், அத்தேர்வுகளுக்கான வினாத்தாள் கசியாமல் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.'' இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.