9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு... தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவு

education school student exam class
By Jon Apr 11, 2021 01:09 PM GMT
Report

தமிழகத்தில் 8,9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த தமிழகப் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது. இந்தியாவிலும் கொரோனா தொற்றுப் பரவல் தற்போது அதிகரித்துள்ளது. அதனால் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பள்ளி ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வருகின்றனர். இந்நிலையில் 8,9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த தமிழகப் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் கொரோனா பரவல் காரணமாக 12 ஆம் வகுப்பு மாணவர்களைத் தவிர்த்து அனைவரும் தேர்ச்சி என அறிவித்தார்.

9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு... தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவு | Exam Class Students Tamilnadu School Education

இந்த நிலையில் 8,9,10 ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அறிந்துகொள்ளும் பொருட்டு அவர்களுக்கு தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக வாட்ஸ் ஆப் வழியாக கேள்விகளை அனுப்பி உரிய விடைகளை எழுதி அனுப்பும்வகையில் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.