நள்ளிரவில் இலங்கை வந்த கோட்டாபய ராஜபக்ச : குவிக்கப்பட்ட ராணுவத்தினர்
மக்களின் கடும் எதிர்ப்பால் தப்பியோடிய முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சே தாய்லாந்தில் இருந்து இலங்கை திரும்பியுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக அங்கு மக்களின் அத்தியாவசிய பொருட்கள் என்பது உச்சத்தை அடைந்தது. இதனால் இலங்கை மக்கள் ராஜபக்சே குடும்பத்திற்கு எதிராக திரும்பினர் .
தப்பியோடிய ராஜபக்சே
மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட வந்து நிலையில் போராட்டத்தின் பலனாக பிரதமர் மஹிந்த ராஜபக்சே மற்றும் அவரது அமைச்சர்கள் அதிபர் கோட்டாபய ராஜபக்சே தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து மக்களின் போராட்டம் கலவரமாக மாறிய காரணத்தினால் அவர்கள் இலங்கையில் இருந்து தப்பித்து வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்தனர் தற்போது. இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவி வகித்து வருகிறார்.
மீண்டும் இலங்கை திரும்பினார்
இலங்கையிலிருந்து தப்பி சென்ற கோட்டாபய ராஜபக்சே மாலத்தீவு, சிங்கப்பூர் சென்றார். அங்கு விசா காலம் முடிவடைந்ததையடுத்து கடந்த 11ஆம் தேதி தாய்லாந்துக்கு வருகை புரிந்தார். தற்போது சுமார் 7 வாரங்களுக்கு பிறகு இலங்கை திரும்பினார் கோட்டாபய இந்த நிலையில் கோட்டபய ராஜபக்சேவை மீண்டும் பிரதமராக்க ஆளுங்ககட்சி சூழ்ச்சி செய்து வருவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மீண்டும் கோட்டபய வந்துள்ளதால் முக்கிய இடங்களில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.