மாடல் அழகி கொடூர கொலை; உடலை BMW காரில் கடத்திச்சென்ற குற்றவாளிகள் - அதிர்ச்சி!

India Crime Death Murder Haryana
By Jiyath Jan 04, 2024 03:45 AM GMT
Report

முன்னாள் மாடல் அழகி ஹோட்டல் ஒன்றில் கொலை செய்யப்பட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளம்பெண் கொலை

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 27 வயது இளம்பெண் கொலை செய்யப்பட்டார். திவ்யா பஹுஜா என்ற மாடல் அழகி, அந்த ஹோட்டல் உரிமையாளரான அபிஜீத் சிங் என்பவரால் கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மாடல் அழகி கொடூர கொலை; உடலை BMW காரில் கடத்திச்சென்ற குற்றவாளிகள் - அதிர்ச்சி! | Ex Model Divya Pahuja Killed In Gurugram Hotel

இதனையடுத்து ஹோட்டல் நிர்வாகி உட்பட 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அபிஜீத் சிங் தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்த கொலையை செய்ததாகவும், பின்னர் உடலை அப்புறப்படுத்த நண்பர்களுக்கு ரூ.10 லட்சம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

அந்த இளம்பெண்ணின் உடலை ஒரு பிஎம்டபிள்யூ காரில் போர்வையில் சுருட்டிக்கொண்டு சம்பவ இடத்திலிருந்து குற்றவாளிகள் தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

மாடல் அழகி கொடூர கொலை; உடலை BMW காரில் கடத்திச்சென்ற குற்றவாளிகள் - அதிர்ச்சி! | Ex Model Divya Pahuja Killed In Gurugram Hotel

இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குருகிராம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திவ்யாவின் உடலை கண்டுபிடிக்க பல்வேறு பகுதிகளில் போலீசார் தேடியும் வருகின்றனர்.

மேலும், இறந்த திவ்யாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் ஹோட்டல் உரிமையாளர் அபிஜீத் மற்றும் பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.