மீண்டும் அதிமுகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ., - அதிர்ச்சியில் அமமுகவினர்

Rajavarman Edappadi palanisamy Admk Rajendra balaji Ttv Dinakaran
By Petchi Avudaiappan Jul 17, 2021 12:09 PM GMT
Report

சாத்தூர் தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ., ராஜவர்மன் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் அதிமுகவினரிடையே உட்கட்சி பூசல் நிலவிவந்த நிலையில் அது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கடுமையாக வெளிப்பட்டது. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அதிமுகவில் இருந்து விலகிய அப்போதைய எம்.எல்.ஏ., ராஜவர்மன் அமமுகவில் இணைந்தார்.

இதனை தொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட்ட அவர் தோல்வியடைந்தார். இந்நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து மீண்டும் அதிமுக கழகத்தின் ராஜவர்மன் தன்னை இணைத்துக் கொண்டார்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியும் ராஜவர்மனும் பிரிவுக்குப் பிறகு மீண்டும் இணைந்திருப்பது, விருதுநகர் மாவட்ட அதிமுகவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.