ஜல்லிக்கட்டு போட்டியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் காளை மயங்கி விழுந்து காயம்
புதுக்கோட்டை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின் போது வாடிவாசலில் இருந்து வெளியே வந்த காளை கட்டையில் மோதி மயங்கி விழுந்து காயம் அடைந்தது.
விஜயபாஸ்கர் காளை காயம்
புதுக்கோட்டை மாவட்டம் வடசேரிப்பட்டியில் ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருவது வழக்கம்.
அதே போன்று இந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் காளை கலந்து கொண்டது.
அப்போது வாடிவாசலில் இருந்து விஜயபாஸ்கரின் காளை அவிழ்த்துவிடப்பட்டது. சீறிவந்த காளையை வீரர்கள் ஆர்வத்துடன் அடக்க முன்னேறினர்.
வாடிவாசலில் இருந்து வெளியே வரும் வழியில் வைக்கப்பட்டிருந்த கட்டையின் மீது காளை மோதியது.
இதில் நிலைகுலைந்த காளை அங்கேயே மயங்கி சரிந்து விழுந்தது. இதையடுத்து உடனடியாக விஜயபாஸ்கரின் காளை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.