எல்லாம் டிக்கெட் வாங்குப்பா...மாணவர்களை காரில் ஏற்றி இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜயபாஸ்கர்..!

School AIADMK Students ViralVideo அதிமுக VijayaBaskarC. Exminister சி.விஜயபாஸ்கர்
By Thahir Mar 31, 2022 09:23 PM GMT
Report

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவும்,முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் சாலையில் நடந்து சென்ற பள்ளி மாணவர்களை தனது காரில் ஏற்றி சென்று வீடுகளில் இறக்கிவிட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதிமுகவின் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவர் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர். பதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டம்,ராப்பூசல் கிராமம் இவரது சொந்த கிராமம் ஆகும்.

கடந்த 2011 ஆம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவருக்கு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக நியமித்தார்.

இதையடுத்து 2016 ஆம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவருக்கு மீண்டும் மக்கள் நல்வாழ்வுத்துறை இலாகா வழங்கப்பட்டது.

சுறுசுறுப்பாக சிறுவயது வாலிபரை போன்று தன் கிராமத்தை சுற்றி வரும் அவர் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தனது தொகுதி மக்களுக்கு பெற்று கொடுத்துள்ளார்.

தன் கிராமத்திற்கும் தன் சட்டமன்ற தொகுதி மக்களுக்கும் மத்தியில் செல்லப்பிள்ளையாக வலம் வருகிறார் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.

தன் கிராமத்தில் நடைபயணம் கிராம மக்களுடன் சகஜமாக பேசுவது இவரது தனி இயல்பு. இந்நிலையில் தனது கிராமத்தில் காரில் சென்று கொண்டிருந்த அவர் பள்ளி முடித்து விட்டு நடந்து சென்ற மாணவர்களை கண்டு தனது காரை நிறுத்தினார்.

பின்பு அவர்களை தனது காரில் ஏறச் செய்தார் அப்போது மாணவி ஒருவர் நல்லா இருக்கீங்களா என்று புன்னகையுடன் கேட்கவே அவர் நல்லா இருப்பதாக கூறினார்.

பின்னர் தன் காரில் ஏறிய மாணவர்களை எல்லாம் டிக்கெட் வாங்குப்பா என ஜாலியாக பேசியபடி அவர்களது வீடுகளுக்கே கொண்டு சென்று இறக்கிவிட்டு அவர்களுக்கு சாக்லெட் வழங்கினார்.

ஒரு எம்எல்ஏ அதுவும் முன்னாள் அமைச்சர் தனது காரில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்று அவர்களது வீடுகளில் இறக்கிவிட்ட வீடியோ காட்சி இணையத்தில் வைராகும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரை பாராட்டி வருகின்றனர்.