முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வழக்கு இன்று விசாரணை
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வழக்கு இன்று விசாரணை வருகின்றது.
இன்று வழக்கு விசாரணை
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி எஸ்பி வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை, உயர் நீதிமன்ற நீதிபதிகள் பிஎன் பிரகாஷ், டீக்காராமன் அமர்வில் இன்று நடைபெறுகிறது.
அரசு தரப்பில் முறையீடு
இந்த வழக்கை விரைவாக விசாரணைக்கு பட்டியலிடக்கோரி அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜுன்னா முறையீட்டை ஏற்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் இரு நீதிபதிகள் அமர்வுக்கு மனுக்களை மாற்றிய நிலையில், அரசு தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.