முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது கொலை முயற்சி புகார்
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தன் பதவியை பயன்படுத்தி அரசு வேலை வாங்கி தருவதாக கூறியும் அவர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டுகளும் இருப்பதாக காவல்துறை தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆவின் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று கொண்ட நிலையில் அவர் வேலை வாங்கி தராத நிலையில் பணத்தையும் திருப்பி தராததால் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
நீதிபதி நிர்மல் குமார் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கில் காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா,
ராஜேந்திர பாலாஜி வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியது மட்டுமின்றி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி அவருக்கு முன் ஜாமீன் வழங்க கூடாது என வாதிட்டார்.
இதனையடுத்து ராஜேந்திர பாலாஜி வழக்கறிஞர் வாதங்களை முன் வைத்தார் அதில் அரசியல் உள்நோக்கத்தோடு வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும்,
எனவே இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்க வேண்டும் என கூறினார்.
இரு தரப்பு வாதங்களையும கேட்டறிந்த நீதிபதி வழக்கு விசாரணையை நவம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.அதுவரை காவல்துறை அவரை கைது செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டனர்.