லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு எதிராக அதிமுகவினர் கோஷம்
லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆதரவாளர்கள் கோஷங்களை எழுப்பி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாமக்கல் பள்ளிபாளையம் அருகே உள்ள ஆலம்பாளையம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனை குறித்து நாமக்கல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கில் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாகவும்.
மேலும் இவர் ஆட்சியில் இருக்கும்போது வருமானத்துக்கு அதிகமாக கூடுதலாக 4.85 கோடி சொத்துகள் சேர்த்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த சோதனை தனது நாமக்கல் திருச்செங்கோடு பள்ளிபாளையம் ஆகிய இடங்களில் உள்ள அவர்களின் உறவினர் வீடுகளிலும் மற்றும் தங்கமணியின் மகன் மனைவி ஆகியோர் இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சோதனை குறித்து அறிந்த அவரது ஆதரவாளர்கள் சோதனை நடைபெறும் இடங்களில் சோதனை செய்யும் அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருவதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.