முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

Ex Minister Manikandan
By Thahir Jul 02, 2021 07:34 AM GMT
Report

நடிகை அளித்த மோசடி புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்! | Ex Minister Manikandan

அந்த மனுவில், தனக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் தவறானது, உண்மைக்குப் புறம்பானது. திருமணம் செய்து கொள்வதாக எந்த வகையிலும், புகார் அளித்த பெண்ணை ஏமாற்றவில்லை. என்மீது புகார் அளித்தவர் ஒன்றும் தெரியாதவர் அல்ல. நன்கு படித்து நல்ல வேலையில் உள்ளவர்.

ஏற்கெனவே நான் திருமணமானவன் என்று அவருக்கு தெரியும். இந்த நிலையில் எனக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாருக்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை. நான் கொடுத்த 5 லட்சம் ரூபாய் கடனை திரும்ப கேட்டபோது இந்த பிரச்னை ஏற்பட்டதாகவும் மற்றபடி தான் நிரபராதி தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும். இதற்காக நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை ஏற்க தயாராக இருக்கிறார்" எனத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரஉள்ளது.