முன்னாள் அமைச்சர் வீட்டில் ரெய்டு! அரசியல் களத்தில் தொடங்கியது சோதனை!

முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 21 இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.

முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, மற்ற இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது.

அவரின் சென்னை வீடு, கருரில் உள்ள வீடு என 21 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். கடந்த ஆட்சியின் எம்.ஆர் விஜயபாஸ்கர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது போக்குவரத்து கழகங்களில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது.

இந்த புகாரையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்