கற்பழிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு ஆயுள் தண்டனை

Ex Minister Rape case life sentence
By Thahir Nov 13, 2021 12:22 AM GMT
Report

உத்தரபிரதேசத்தில் முந்தைய சமாஜ்வாடி கட்சி அரசில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் காயத்ரி பிரஜாபதி.

இவரும், இவருடைய கூட்டாளிகளும் கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து தன்னை கற்பழித்து வந்ததாக கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு பெண் போலீசில் புகார் கொடுத்தார்.

போலீசார் நடவடிக்கை எடுக்காததால், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில், கற்பழிப்பு வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் காயத்ரி பிரஜாபதியும், அவருடைய கூட்டாளிகள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான தனி கோர்ட்டு பிரஜாபதி, அசோக் திவாரி, ஆஷிஷ் சுக்லா ஆகியோர் குற்றவாளிகள் என்று கடந்த 10-ந் தேதி தீர்ப்பு அளித்தது.

மீதி 4 பேரை விடுதலை செய்தது. இந்தநிலையில் காயத்ரி பிரஜாபதி உள்பட 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தனி கோர்ட்டு நீதிபதி பி.கே.ராய் நேற்று உத்தரவிட்டார். அவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் அபராதமும் விதித்தார்.