உக்ரைனில் சிக்கியுள்ள மாணவி-தொலைபேசியில் நலம் விசாரித்த முன்னாள் அமைச்சர்
உக்ரைன் ரஷ்ய போரில் செய்வதறியாது தவித்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவியைத் தொடர்பு கொண்டு தைரியம் கொடுத்தார் முன்னாள் அமைச்சர் காமராஜர்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா பகுதியை சேர்ந்த அபிராமி என்பவர் தற்போது ரஷ்யா எல்லைக்கு அருகிலுள்ள கார்க்யூ பகுதியில் மாட்டிக் கொண்டுள்ளார்.
அவரைப்போல 50க்கும் மேற்பட்ட தமிழ் மாணவர்கள் மற்றும் பல இந்தியர்கள் அங்கு மாட்டிக்கொண்டுள்ளார்கள் என தகவலறிந்த முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ்,
நேரடியாக அபிராமி வீட்டிற்கு சென்று அவர்களின் பெற்றோர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அதன்பிறகு அபிராமியிடம் தொலைபேசியில் பேசினார் கவலைப்படாமல் இருங்கள் தொடர்ந்து உங்களை இந்தியா கொண்டுவருவதற்கான வேலைகளை நான் செய்து வருகிறேன்.
ஆகவே நீங்கள் தைரியமாக இருங்கள் என தொலைபேசியில் பேசினார்.
மேலும் அவர்களுடைய பெற்றோர் மற்றும் உறவினர்களிடம், மத்திய மாநில அரசிடம் தொடர்ந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்க நான் தொடர்ந்து முயற்சித்து வருகிறேன்.
ஆகவே நம் மாவட்டத்தில் உள்ள அனைவரும் பாதுகாப்பாக வருவார்கள் என அவர்களிடம் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் ஒட்டுமொத்தமாக அங்கு சிக்கியுள்ள இந்தியர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு எடுக்க மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு செயல்பாடுகளை செய்து வருகிறது ஆகவே அனைவரும் பத்திரமாக வருவார்கள் என தெரிவித்தார்.