முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மேலும் ஒரு வழக்கு பாய்ந்தது
5 கோடி ரூபாய் மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த மகேஷ் என்பவர் சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவாலை சந்தித்து புகார் அளித்துள்ளனர்.
அவர் அளித்துள்ள புகாரில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மகள் ஜெயப்பிரியாவை எனது சகோதரர் நவீன்குமார் திருமணம் செய்துள்ளார்.
நான் மீன் வலை தயாரிக்கும் தொழிற்சாலையை ஒக்கியம் துரைப்பாக்கத்தில நடத்தி வந்தேன். ரூ.5 கோடி மதிப்பிலான அந்த தொழிற்சாலை எனது பெயரில் உள்ளது.
என்னுடன் நவீனும் சேர்ந்து தொழில் செய்து வந்தார். தொழில் தொடர்பாக எங்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது.
இதை பயன்படுத்தி ஜெயக்குமார் கடந்த 2014-ல் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து, தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்து அதை அபகரித்துக் கொண்டார்.
நான் பல முறை தொழிற்சாலையை திறக்க முயன்றும் ஜெயக்குமார், நவீன், ஜெயப்பிரியா தரப்பு தகராறு செய்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது மகள்,மருமகன் மீது நடவடிக்கை எடுக்க சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
இதையடுத்து ஜெயக்குமார்,ஜெயப்பிரியா,நவீன் ஆகிய 3 பேர் மீது 6 பிரிவுகளில் மத்திய குற்றப் பிரிவினர் வழக்குப்பதி செய்துள்ளனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஜெயப்பிரியா,நவீனை மத்திய குற்றப் பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.
You May Like This
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan