''கற்பழிக்கப்படும் போது ஒரு பெண்ணால் தப்பிக்க முடியாவிட்டால் அதை சந்தோஷமாக அனுபவியுங்கள் '' - முன்னாள் சபாநாயகர் சர்ச்சை பேச்சு

assembly exkarnatakaspeaker KR Ramesh Kumar
By Irumporai Dec 17, 2021 02:20 AM GMT
Report

கர்நாடக சட்டசபையில் பெண்களை அவமதிக்கும் வகையில் பேசிய கர்நாடக முன்னாள் காங்கிரஸ் சபாநாயகர் ரமேஷ் குமாருக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவியில் உள்ள சுவர்ணசவுதாவில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் விவசாயிகள் நலன் தொடர்பாகவும், ஒன்றிய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டம் தொடர்பாகவும் பல காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

வியாழக்கிழமை அன்று வேளாண் சட்டம் தொடர்பாவும் விவசாயிகள் நலன் தொடர்பாகவும் விவாதிக்க எதிர்கட்சியான காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் பல்வேறு கேள்விகளை தொடர்ச்சியாக எழுப்பினர்.

எதிர்க்கட்சிகளின் ஆவேச கேள்விகளுக்கு பதிலளிக்க பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரை முற்றுகையிட்டனர். அப்போது என்னிடம் முற்றுகையிட்டால் நான் என்ன செய்வது என சபாநாயகர் கேள்வியை எழுப்பினார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய முன்னாள் காங்கிரஸ் சபாநாயகர் ரமேஷ் குமார் "ஒரு பழமொழி உள்ளது ஒரு பெண் கற்பழிக்கப்படும் போது தப்பிக்க முடியாவிட்டால் அதை சந்தோஷமாக எடுத்துக் கொள்ள வேண்டும்"என்று குறியீட்டு பேசினார்.

இந்த பேச்சு கர்நாடகாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை கேட்ட சபாநாயகர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் நான் தாங்கள் கூறியதை ஏற்றுக்கொள்கிறேன் அதே நிலையில் தான் நான் தற்பொழுது இருக்கிறேன் என்று சிரித்தவாறே பேசியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.